/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேப்ளாநத்தம் கோவிலில் அமுதுபடையல் விழா
/
சேப்ளாநத்தம் கோவிலில் அமுதுபடையல் விழா
ADDED : மே 08, 2024 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் அடுத்த வடக்கு சேப்ளாநத்தம் உத்திராபதீஸ்வரர் கோவிலில், 124வது ஆண்டு சிறுதொண்ட நாயனார் அமுது படையல் விழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் சீராளன் பல்லக்கில் வீதியுலா மற்றும் அமுதுபடையல் விழா நடந்தது.
குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு பிள்ளைக்கறி பிரசாதம் வழங்குவது இக்கோவிலில் சிறப்புடையதாகும்.
இதனால், குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பெண்கள் அமுதுபடையல் விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்து பிரசாதம் வாங்கி சென்றனர்.
அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது