ADDED : ஆக 22, 2024 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : மாவட்ட மற்றும் மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் புனித பிலோமினாள் பெண்கள் உயர்நிலை பள்ளி மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கடலுார் துறைமுகம் புனித பிலோமினாள் பெண்கள் உயர்நிலை பள்ளியை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி சாதனா குறுவட்ட, மாவட்ட, மற்றும் மாநில அளவில் சிலம்பம் போட்டியில் முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். பள்ளியில் நடந்த விளையாட்டு விழாவில் கடலுார் டி.எஸ்.பி., பிரபு மாணவிக்கு கேடயம், சான்றிதழ், சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினார்.