ADDED : ஆக 18, 2024 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட முதியவர், குட்டையில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
கடலுார் அடுத்த கே.என்., பேட்டையை சேர்ந்தவர் கணேசன், 68; சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர், நேற்று காலை 8:00 மணிக்கு திருவந்திபுரம் பழைய சுவாமி தெப்பம் குட்டையில் குளித்துள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக குட்டையில் மூழ்கி, கணேசன் பரிதாபமாக இறந்தார்.
அவரது மனைவி பத்மா, 43; கொடுத்த புகாரின்பேரில், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

