/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முந்திரி தோப்பில் மூதாட்டி உடல் நடுவீரப்பட்டு அருகே பரபரப்பு
/
முந்திரி தோப்பில் மூதாட்டி உடல் நடுவீரப்பட்டு அருகே பரபரப்பு
முந்திரி தோப்பில் மூதாட்டி உடல் நடுவீரப்பட்டு அருகே பரபரப்பு
முந்திரி தோப்பில் மூதாட்டி உடல் நடுவீரப்பட்டு அருகே பரபரப்பு
ADDED : மே 28, 2024 04:56 AM
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே முந்திரி தோப்பில் மூதாட்டி இறந்தது கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டையில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பில் நேற்று காலை துர்நாற்றம் வீசியது. பொதுமக்கள் சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் மூதாட்டி உடல் கிடந்தது.
நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.விசாரணையில் இறந்தவர் பண்ருட்டி அடுத்த ஏ.புதூர் கிழக்கு தெருவை சேர்ந்த கோபால் மனைவி வெள்ளச்சி (எ) ஞானாம்பாள், 90; என தெரியவந்தது.
ஞானாம்பாள் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும்,கடந்த 10 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை எனவும் தெரியவந்தது.இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் ஞானாம்பாள் மகன் சுந்தரமூர்த்தி கொடுத்த புகாரின், பேரில் மூதாட்டி எப்படி இறந்தார் என, விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தியது.