/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொள்ளுக்காரன்குட்டை நினைவிடத்தில் பா.ம.க., தலைவர் அன்புமணி அஞ்சலி
/
கொள்ளுக்காரன்குட்டை நினைவிடத்தில் பா.ம.க., தலைவர் அன்புமணி அஞ்சலி
கொள்ளுக்காரன்குட்டை நினைவிடத்தில் பா.ம.க., தலைவர் அன்புமணி அஞ்சலி
கொள்ளுக்காரன்குட்டை நினைவிடத்தில் பா.ம.க., தலைவர் அன்புமணி அஞ்சலி
ADDED : செப் 18, 2024 06:11 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கொள்ளுக்காரன்குட்டை தேசிங்கு நினைவிடத்தில் பா.ம.க.,தலைவர் அன்புமணி அஞ்சலி செலுத்தினார்.
பண்ருட்டி அடுத்த கொள்ளுக்காரன்குட்டையில் வன்னியர் சங்க போராட்டத்தின்போது உயிர்நீத்த தேசிங்கு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று பா.ம.க., சார்பில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், செல்வகுமார், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞர்சங்க தலைவர் பாலகுரு முன்னிலை வகித்தனர்.
பா.ம.க., தலைவர் அன்புமணி, நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.
இதில்வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி, வக்கீல் பாலு, பேராசிரியர் செல்வகுமார், மாவட்ட செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், செல்வமகேஷ், கார்த்திகேயன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.