/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ம.க., நிர்வாகி படத்திற்கு அன்புமணி அஞ்சலி
/
பா.ம.க., நிர்வாகி படத்திற்கு அன்புமணி அஞ்சலி
ADDED : ஆக 05, 2024 04:54 AM

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில், மறைந்த பா.ம.க., நிர்வாகி தனபால் படத்திற்கு, அக்கட்சியின் தலைவர் அன்புமணி மலர்துாவி அஞ்சலி செலுத்தினார்.
திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தை சேர்ந்த பா.ம.க., மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் தனபால், 75. கடந்த ஜூலை 27ம் தேதி இறந்தார்.
அவரது இல்லத்திற்கு, பா.ம.க., தலைவர் அன்புமணி நேற்று முன்தினம் வந்து, அவரது மகன் பாரதிதாசன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து பா.ம.க., மாநில நிர்வாகி தனபால் படத்திற்கு, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பா.ம.க., மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல், மங்களூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கோபி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.