/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டியில் நகை திருட்டு ஆந்திர வாலிபர் சிக்கினார்
/
பண்ருட்டியில் நகை திருட்டு ஆந்திர வாலிபர் சிக்கினார்
பண்ருட்டியில் நகை திருட்டு ஆந்திர வாலிபர் சிக்கினார்
பண்ருட்டியில் நகை திருட்டு ஆந்திர வாலிபர் சிக்கினார்
ADDED : செப் 04, 2024 03:53 AM
பண்ருட்டி: பண்ருட்டியில் ஸ்கூட்டியை உடைத்து நகை, பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில், 47; இவர், கடந்த 17ம் தேதி பண்ருட்டி இந்தியன் வங்கியில் அடகு வைத்த 5 சவரன் நகையை மீட்டு தனது ஸ்கூட்டி பெட்டியில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்.
ராஜாஜி சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்து பார்த்தபோது, ஸ்கூட்டி பெட்டி உடைந்திருந்தது. அதில் வைத்திருந்த 5 சவரன் நகை மற்றும் 28 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.
புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் தனிப்படைபோலீசார் நேற்று முன்தினம் வி.கே.டி., சாலை ராஜாப்பாளையம் கூட்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பைக்கில் வந்த நபர், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
தொடர் விசாரணையில், ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் ஒ.ஜி.குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன்,46; என்பதும், பண்ருட்டியில் செந்தில் ஸ்கூட்டியில் இருந்து நகை திருடியதை ஒப்புக் கொண்டார்.
அதையடுத்து போலீசார், வெங்கடேசனை கைது செய்து, 4சவரன் நகை, 28 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், இவர் திண்டிவனத்தில் வங்கியில் இருந்து பணம் எடுத்து சென்ற பெண்ணிடம் ரூ.3 லட்சம் பணத்தை திருடியது தெரிய வந்தது.