/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசனம்
/
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசனம்
ADDED : ஜூலை 13, 2024 12:19 AM

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற ஆனி திருமஞ்சன தரிசனத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் தேர் திருவிழா நடந்தது. அன்று இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜ மூர்த்திக்கும், சிவகாமசுந்தரிக்கும் ஏககால லட்சார்ச்சனை நடந்தது. நேற்று அதிகாலை ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் மகா அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, காலை நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி திருவாபரண அலங்காரத்தில் அர்ச்சனை நடந்தது. பின், சித்சபையில் உற்சவ ஆச்சாரியாரால், ரகசிய பூஜை நடந்தது.
பிற்பகல் 2:10 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து, நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரியும் நடன பந்தலில் முன்னும், பின்னும் நடனமாடியபடி, ஆனி திருமஞ்சன தரிசனம் தந்தனர். தொடர்ந்து சித்சபா பிரவேசம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏ.எஸ்.பி., ரகுபதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.