/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாங்குளம் ஊராட்சியில் கால்நடை வளர்ப்பு பயிற்சி
/
மாங்குளம் ஊராட்சியில் கால்நடை வளர்ப்பு பயிற்சி
ADDED : ஜூலை 30, 2024 11:28 PM
சிறுபாக்கம் : சிறுபாக்கம் அடுத்த மாங்குளம் ஊராட்சியில், கால்நடை வளர்ச்சி பயிற்சி முகாம் நடந்தது.
மங்களூர் வட்டார அட்மா குழு தலைவர் செங்குட்டுவன் வழிகாட்டுதலின்படி, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த கால்நடைகள் வளர்ச்சி பயிற்சி முகாம் நடந்தது. மங்களூர் வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) கீர்த்தனா தலைமைதாங்கினார்.
கால்நடை மருத்துவர் விஜய், ஊராட்சி தலைவர் மஞ்சுளா தங்கதுரை, தோட்டக்கலை உதவி அலுவலர் சங்கர், வேளாண் உதவி அலுவலர் கோவிந்தசாமி, அலுவலர்கள் தமிழ் ஆனந்த், செல்லமுத்து, முத்துசாமி, விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், நவீன முறையில் கால்நடைகள் பராமரிப்பு, தொற்று நோய் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.