/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்னாள் முதல்வருக்கு அஞ்சலி அமைச்சர் வேண்டுகோள்
/
முன்னாள் முதல்வருக்கு அஞ்சலி அமைச்சர் வேண்டுகோள்
ADDED : ஆக 04, 2024 12:25 AM

சிறுபாக்கம்: கடலுார் மேற்கு மாவட்ட பகுதிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை அனுசரிக்க. அமைச்சர் கணேசன், கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: முதல்வர் ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உத்தரவின்படி, கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு நாளை, வரும் 7ம் தேதி அனுசரிக்க வேண்டும்.
அன்றைய தினம் காலை அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு, கிளைகள் தோறும் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்த வேண்டும். மேலும், அமைதி ஊர்வலம் சென்று, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
இதில், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி செயலர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள், அனைத்து சார்பு அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.