/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'கேலோ இந்தியா' வில் 2 தங்கம், 2 வெண்கலம் அண்ணாமலை பல்கலை பெண்கள் கால்பந்து அணி சாதனை
/
'கேலோ இந்தியா' வில் 2 தங்கம், 2 வெண்கலம் அண்ணாமலை பல்கலை பெண்கள் கால்பந்து அணி சாதனை
'கேலோ இந்தியா' வில் 2 தங்கம், 2 வெண்கலம் அண்ணாமலை பல்கலை பெண்கள் கால்பந்து அணி சாதனை
'கேலோ இந்தியா' வில் 2 தங்கம், 2 வெண்கலம் அண்ணாமலை பல்கலை பெண்கள் கால்பந்து அணி சாதனை
ADDED : ஆக 01, 2024 06:46 AM

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி துறை பெண்கள் கால்பந்து அணி, தொடர்ந்து 4 ஆண்டுகளாக 'கேலோ இந்தியா' போட்டியில், தங்கம் மற்றும் வெங்கல பதக்கங்களை குவித்து சாதித்துள்ளது. மேலும், மாணவிகள் சவுமியா, சந்தியா ஆகியோர், இந்திய அணிக்காக விளையாடி, பல்கலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கொல்கத்தாவில் இந்த ஆண்டு நடந்த கேலோ இந்தியா போட்டியில் தங்கம் வென்று சாதித்தனர். சிதம்பரம் திரும்பிய அணியை, பல்கலை., துணைவேந்தர் கதிரேசன் மற்றும் விளையாட்டு துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ரயில் நிலையம் சென்று வரவேற்று, மாலை அணிவித்து, மேளதாளத்துடன் அழைத்து வந்து, கவுரவப்படுத்தினர்.
பயிற்சியாளரும், பல்கலைக்கழக விளையாட்டு துறை தலைவருமான ராஜசேகர் மற்றும் பயிற்சியாளர் சிவா ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர்.
அண்ணாமலை பல்கலைக்கழக பெண்கள் கால்பந்து அணி, தென் மண்டல அளவிலான பல்கலைக் கழகங்களுக்கிடையிலான போட்டிகளில், கடந்த 5 ஆண்டுகளில் 2 முறை தங்கம், இரு முறை வெண்கல பதக்கங்களை பெற்றது. அகில இந்திய பல்கலைகழகங்களுக்கு இடையிலான போட்டிக்கு தகுதி பெற்று, அதிலும், 6 ஆண்டுகளில் 2 முறை தங்கம், 2 முறை வெள்ளி, 2 முறை வெண்கலம் வென்றனர்.
2009 ம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக, அண்ணாமலை பல்லைகழக பெண்கள் கால்பந்து அணியினர், தொடர்ந்து, அகில இந்திய அளவிலான போட்டிகளில் தகுதி பெற்று விளையாடி வருகின்றனர்.
கடந்த 21, 22ம் ஆண்டுகளில் நடந்த போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்றதற்காக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னையில் நடந்த விழாவில், அண்ணாமலை பல்கலை., அணிக்கு, 45 லட்சம் ரூபாய் ஊக்கப்பரிசு வழங்கி, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பாராட்டினார்.
தொடர்ந்து 15 ஆண்டுகளாக வெற்றி கோப்பைகளை கைப்பற்றி வரும் பல்கலைகழக பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளர்கள் ராஜசேகர் மற்றும் சிவக்குமாருக்கு பாராட்டுகள் குவிகிறது.