/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம்
/
போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஆக 27, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதை எதிர்ப்பு இருசக்கர விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் நடந்தது.
கடலுார், பாதிரிக்குப்பத்தில் துவங்கிய பிரசாரத்திற்கு, ஒன்றிய தலைவர் பிரசாந்த் தலைமை தாங்கினார். செயலாளர் கலைவாணன் வரவேற்றார். நிர்வாகிகள் நித்திஷ்குமார், கோகுல்ராஜ் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜேஷ்கண்ணன், மத்தியக்குழு உறுப்பினர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றினர்.
கடலுார் முதுநகர் மணிகூண்டில் நிறைவடைந்த பிரசாரத்தில், பொதுமக்களுக்கு போதை எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். ஒன்றிய பொருளாளர் சிவன்ராஜ் நன்றி கூறினார்.