/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போதை எதிர்ப்பு விழிப்புணர்வு போட்டி
/
போதை எதிர்ப்பு விழிப்புணர்வு போட்டி
ADDED : ஜூன் 28, 2024 01:06 AM

கடலுார்: கடலுாரில் நடந்த போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகளில், பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
கடலுாரில், மகாத்மா காந்தி குடி மற்றும் போதை மறுவாழ்வு மையம், செயிண்ட் ஜோசப் கல்லுாரி இணைந்து கல்லுாரி மாணவ மாணவிகளுக்கிடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை போட்டிகள் நடத்தப்பட்டது.
கடலுார் செயிண்ட் ஜோசப் கல்லுாரி, கே.என்.சி, கிருஷ்ணசாமி கல்லுாரி, இமாகுலேட், தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரிகளை சேர்ந்த 200 மாணவ மாணவியர் பங்கேற்றனர். இறுதி போட்டி நேற்று செயிண்ட் ஜோசப் கல்லுாரியின் சமூகப்பணி துறை வளாகத்தில் நடந்தது. துணை முதல்வர் ஜான் ஆரோக்கியராஜ், துறைத் தலைவர் துரைராஜ் முன்னிலை வகித்தனர். நடுவர்களாக குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இளங்கோவன், முன்னாள் தலைவர் ெஹண்ரி லாரான்ஸ் செயல்பட்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். மகாத்மா காந்தி குடி மற்றும் போதை மறுவாழ்வு மைய நிறுவனர் சுதர்சனா ஏற்பாடுகளை செய்திருந்தார்.