/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி
/
போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி
ADDED : ஜூன் 26, 2024 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
திட்டக்குடி தாசில்தார் அந்தோணிராஜ், மங்களூர் வட்டார மருத்துவஅலுவலர் டாக்டர் திருமாவளவன், ஆர்.டி.ஓ.,நேர்முக உதவியாளர் செல்வமணி, மண்டல துணை தாசில்தார் பழனி, தலைமையிடத்து துணை தாசில்தார் விஜயா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் மற்றும் வருவாய்அலுவலர்கள், சுகாதாரஆய்வாளர்கள் உட்பட பலர் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.