/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சி.முட்லுார் அரசு கல்லுாரியில் விண்ணப்பங்கள் வரவேற்பு
/
சி.முட்லுார் அரசு கல்லுாரியில் விண்ணப்பங்கள் வரவேற்பு
சி.முட்லுார் அரசு கல்லுாரியில் விண்ணப்பங்கள் வரவேற்பு
சி.முட்லுார் அரசு கல்லுாரியில் விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மே 10, 2024 01:11 AM
கிள்ளை: சி.முட்லுார் அரசு கல்லுாரியில் இளநிலை முதலாமாண்டு பாடப்பிரிவுகளுக்கு, மாணவர் சேர்க்கை வரும் 20ம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என, கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் (பொ) தெரிவித்துள்ளார்.
அவரது, செய்திக்குறிப்பு;
சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு கலைக் கல்லுாரியில் 2024-2025ம் கல்வியாண்டிற்கான, இளநிலை முதலாமாண்டு இளங்கலை, இளமறிவியல் மற்றும் இளம் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை இணைய வழியில் கடந்த 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்கிறது.
இங்கு, 14 இளநிலை பாடபிரிவுகளும், 10 முதுநிலை பாடப்பிரிவுகளும், 8 ஆராய்ச்சி பாடப்பிரிவுகளும் உள்ளது. இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் 20ம் தேதி என்பதால், கல்லுாரியில் சேர விண்ணப்பிக்க உதவி தேவைப்படுவோர் 04144-295369 கல்லுாரி உதவி மைய எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் உள்ள 165 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் சேர விரும்புகின்ற மாணவர்கள் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் அனைத்து பாடங்களுக்கும் https: www.tngagasa.in ஒருங்கிணைந்த இணைய முகப்பு வாயிலாக ஒரே விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப பதிவு, விண்ணப்ப கட்டணம், பாடபிரிவுகளை தேர்வு செய்தல் மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்தல் ஆகியவை உள்ளடக்கிய அனைத்து செயல்முறைகளையும் மேற்கண்ட இணைய தளத்தில் மேற்கொள்ளலாம். கல்லுாரி குறியீடு எண் 1081013 ஆகும்.
இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.