தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பணி நியமன ஆணை விழா

பணி நியமன ஆணை விழா

பணி நியமன ஆணை விழா


ADDED : மே 09, 2026 08:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 08:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்:  காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில், பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.  கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவை சேர்மன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். நிர்வாக அலுவலர் கோகுல கண்ணன், மேலாளர் விஸ்வநாத் முன்னிலை வகித்தனர். 

கணினி பொறியியல் துறை தலைவர் அகிலன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ஆனந்த்வேலு வாழ்த்தி பேசினார்.

கோவை நவுஸ் இன்போசிஸ்டம் மனிதவளத்துறை முதுநிலை மேலாளர் எத்திராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

  அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரிவு உபசார விழாவில், சினிமா நடிகர் சதீஷ் முத்துக்கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 299 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார். உதவி பேராசிரியர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us