/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆதிதிராவிட மேல்நிலை பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்
/
ஆதிதிராவிட மேல்நிலை பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்
ஆதிதிராவிட மேல்நிலை பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்
ஆதிதிராவிட மேல்நிலை பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்
ADDED : ஜூன் 28, 2024 01:17 AM
கடலுார்: கடலுார் மாவட்ட அதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளிகளில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் இயங்கிவரும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 22 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமிக்கப்படுகின்றனர். தொகுப்பூதிய முறையில் தற்காலிக பணியாகவும், நிபந்தனையின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.
இப்பணிக்கு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளை பின்பற்றப்படும்.
கல்வித் தகுதியுடன், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றிருக்க வேண்டும். பள்ளி உள்ள எல்லைக்குள் அல்லது அந்த ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்க வேண்டும்.
தற்காலிக பணி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஏப்., 2025 வரை மட்டுமே நியமிக்கப்படுவர்.
விண்ணப்பிக்க விரும்புவோர், எழுத்து மூலமான விண்ணப்பத்தை உரிய கல்வி தகுதிச்சான்று ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலம், கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு வரும் ஜூலை 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

