ADDED : ஜூன் 20, 2024 03:45 AM
திட்டக்குடி : திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பிளஸ் 2வில் தேர்வு எழுதிய 126பேரில் 119பேர் தேர்ச்சி பெற்று, 94.44 சதவீதம் பெற்றனர். பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதிய 81 பேரில் 74பேர் தேர்ச்சி பெற்று, 91.35 சதவீத தேர்ச்சி பெற்றனர். அதையடுத்து, சிறப்பான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் ஜெய்சங்கர்மாணவர்களை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார். பிளஸ்2 வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கண்ணன், வேல்முருகன், பெஞ்சமின்பால் ஆகியோருக்கும், பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் சிவா, ஸ்ரீராம், அருள் ஆகியோருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை பள்ளி முதுகலைஆசிரியர் ராமலிங்கம், தனது சம்பளத்திலிருந்து வழங்கினார்.