/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநில அளவில் சாதனை விருதை மாணவிக்கு பாராட்டு
/
மாநில அளவில் சாதனை விருதை மாணவிக்கு பாராட்டு
ADDED : மே 30, 2024 05:38 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவியை மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பாராட்டினார்.
விருத்தாசலம் டாக்டர் இ.கே.சுரேஷ் கல்விக்குழுமத்தின் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி நித்யஸ்ரீ, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்தவில் 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தார்.
இவரை தமிழ்நாடு நர்சரி பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் நந்தகுமார் சால்வை அணிவித்து, 10,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
மாணவியின் பெற்றோர் கோபாலகிருஷ்ணன், மாலதி, பள்ளியின் நிர்வாக இயக்குனர் அருண்குமார், ஆசிரியர் சுந்தரபாண்டியன் உடனிருந்தனர்.