/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா
/
ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா
ADDED : ஆக 22, 2024 12:41 AM

கடலுார் : கூத்தப்பாக்கம் ராகவேந்திரா சுவாமிகள் கோவிலில் 353வது ஆராதனை விழா நடந்தது.
கடலுார் கூத்தப்பாக்கத்தில் அமைந்துள்ள ராகவேந்திரா சுவாமிகள் மருத்திகா பிருந்தாவனத்தில் ராகவேந்திரர் சுவாமிகளின் 353வது ஆராதனை விழா கடந்த 20ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடந்தது.
நேற்று அதிகாலை சுப்ரபாதம், நிர்மால்யம், வேத பாராயணத்துடன் துவங்கியது. பின்னர் ராகவேந்திரா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இரவு ஸ்வஸ்தி மற்றும் மந்திராட்சதை சிறப்பு வழிப்பாடு நடந்தது. சென்னை இந்திரா நடராஜன் சொற்பொழிவு, ரம்யாஸ்ரீ ஹரிபிரசன்னா வீணை வாய்ப்பாடடு கச்சேரி நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கடலுார் சித்தாந்த சேவா சங்க நிர்வாகிகள் செய்தனர்.