/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் அரிமா சங்க முப்பெரும் விழா
/
கடலுாரில் அரிமா சங்க முப்பெரும் விழா
ADDED : செப் 16, 2024 05:48 AM

கடலுார் : கடலுார் சென்ட்ரல் மற்றும் சில்வர் ஸ்டார் அரிமா சங்கம் இணைந்து ஆசிரியர் தினம், அன்னை தெராசா தினம், உலக எழுத்தறிவு தினம் ஆகிய முப்பெரும் விழாவை அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகத்தில் நடத்தியது.
அரிமா சங்க தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். டாக்டர் சுரேஷ்ராஜன் முன்னிலை வகித்தார். குழந்தைகள் காப்பகம் கண்காணிப்பாளர் அருள்மொழிச்செல்வி வரவேற்றார். வி ஸ்கொயர் மால் நிர்வாக இயக்குனர் அனிதா ரமேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சிறப்பாக பணி செய்த ஆசிரியர்களுக்கு விருதினை சேர்மேன் பாடலி சங்கர், மண்டல தலைவர் உமாசங்கர் வழங்கி பாராட்டினர். டாக்டர் ராஜேந்திரன் வாழத்துறை வழங்கினார்.
காப்பக குழந்தைகளுக்கு வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், தனகோபு, சுபத்ரா, ஆனந்தராஜ், இளங்கோவன், இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.