ADDED : மே 12, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பேக்கரியில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையில் முகமது யூனுாஸ் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். கடந்த 9ம் தேதி இரவு கடைக்கு சென்ற புதுக்கூரைப்பேட்டை பழனிவேல் மகன் சரவணன், கோபால் மகன் கோகுல்ராஜ், 25, இருவரும் சிகரெட் கேட்டு தகராறு செய்து, பொருட்களை சேதப்படுத்தினர்.
வேல்முருகன் புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப் பதிந்து, கோகுல்ராஜை கைது செய்தார்.