/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கலைஞர் கனவு இல்ல திட்டம் கலெக்டர் துவக்கி வைப்பு
/
கலைஞர் கனவு இல்ல திட்டம் கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 06, 2024 05:10 AM

புவனகிரி: மேல்புவனகிரி ஒன்றியம் பிரசன்னராமாபுரம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்ட துவக்க நிகழ்ச்சியை பூமி பூஜையை செய்து கலெக்டர் துவக்கி வைத்தார்.
மேல்புவனகிரி ஒன்றியம் பிரசன்னராமாபுரம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் வீடுகட்ட தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆதற்கான ஆணை வழங்ககப்பட்டது.
நேற்று முன் தினம் புவனகிரி ஒன்றியத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் கலெக்டர் அருண்தம்புராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஊராட்சி மன்றத் தலைவர் ராதாபுருேஷாத்தமன் தலைமையில் பிரசன்னராமாபுரத்தில் புதிய வீடு கட்டுதற்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஆரோக்கியமேரிஏசுதால், பி.டி.ஓ., முருகன், உதவி பொறியாளர் வசந்த் மற்றும் பயனாளிகள் பங்கேற்றனர்.