/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அருணாச்சலா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
அருணாச்சலா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 13, 2024 05:30 AM

புவனகிரி: புவனகிரி அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியை கவிதா வரவேற்றார். பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் கிஷோர் 584, மோரேஷ்வர் 583, மாணவி ஷோபனா 579 மதிப்பெண்கள் எடுத்து முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
10ம் வகுப்பில் மாணவிகள் ஜனனி 492, ஷர்மிளா 490, நந்திதா 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். நிர்வாகி ரத்தினசுப்பிரமணியர் தலைமை தாங்கி மாணவர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்.
பள்ளியின் இயக்குனர் முத்துக்குமரன் மாணவர்கள், ஆசிரியர்களை பாராட்டி பரிசு வழங்கினார். தலைமை கல்வி ஆலோசகர் செல்வராஜ், மேற்படிப்புக்கான ஆலோசனை வழங்கினார்.
பள்ளி இயக்குனர்கள் குணசேகர், சரவணன், பெற்றோர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் கோவிந்தராஜன் நன்றி கூறினார். பாடவாரியாக 100 மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் நினைவு பரிசு வழங்கப்பட்டது.