/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அருண்மொழித்தேவன் பிரசாரம்

ADDED : ஏப் 10, 2024 03:58 AM

சிதம்பரம் : புவனகிரி கம்மாபுரம் பகுதியில், சிதம்பரம் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரித்தார்.
புவனகிரி கம்மாபுரம் வடக்கு, தெற்கு ஒன்றிய பகுதிகளில் நேற்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. வீணங்கேணி கிராமத்தில் இருந்து அப்பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து, புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் ஓட்டு சேகரித்தார்.
கட்சி அமைப்பு செயலாளர் செம்மலை, அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் முருகுமணி, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட மாணவரணி தலைவர் வீரமூர்த்தி, கம்மாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் சின்ன ரகுராமன், மருவை முனுசாமி, கங்கைகொண்டான் பேரூராட்சி செயலாளர் சிவஞானம், தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் ஞானபண்டிதர் மற்றும் நிர்வாகிகள் எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கோ ஆதனுாரில் நடந்த பிரசாரத்தின்போது, அப்பகுதியை சேர்ந்த பா.ம,க., வினர் 10க்கும் மேற்பட்டோர், அருண்மொழிதேவன் முன்னிலையில் அ.தி.மு.க., வில் இணைந்தனர்.