/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி
/
கடலுார் தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி
கடலுார் தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி
கடலுார் தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி
ADDED : மார் 06, 2025 02:07 AM

கடலுார்: கடலுாரில் சாம்பல் புதன் திருநாளையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தது.
ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளான புனித வெள்ளி தினம் வரும் ஏப்., 18ம் தேதி வருகிறது. அதையொட்டி, கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலத்தை நேற்று துவக்கினர். சாம்பல் புதன் தினமான நேற்று கடலுார் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தது.
கடலுார் துாய எபிபெனி நேசர் ஆலயம், கார்மேல் அன்னை ஆலயம், ஆற்காடு லுத்தரன் திருச்சபை, சகாய அன்னை ஆலயம், புனித யோவான், திருப்பாதிரிப்புலியூர் புனித சூசையப்பர் ஆலயம், சாமுபிள்ளை நகர் தூய இடைவிடா சகாய அன்னை ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களிலும் அதிகாலை முதல் சிறப்பு திருப்பலி நடந்தது.
ஏராளமானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியின் போது பங்கு தந்தை கிறிஸ்தவர்களை ஆசீர்வதித்து நெற்றியில் சாம்பல் பூசி தவக்காலத்தை துவக்கி வைத்தனர்.