ADDED : ஏப் 03, 2024 03:22 AM

அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.
நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர், சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர், மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் ஆகிய கோவில்களில் நேற்று முன்தினம் இரவு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.
பூஜையை முன்னிட்டு அன்று இரவு 7:00 மணிக்கு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு மகா தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு காலபைரவரை வழிபட்டனர்.
