நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில், பைரவர் சாமிக்கு நேற்று அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை மூலவர் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.
மாலை கோவில் வளாகத்திலுள்ள பைரவர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், திரவியப்பொடி ஆகியவைகளால் அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதேபோன்று, இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில் பைரவர் சாமிக்கு அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.