ADDED : ஜூன் 20, 2024 08:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் இந்தியா சியாட்டில் குழு அமெரிக்கா, சார்பில் பழங்குடியினர் பள்ளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளித்து வருகிறது. இந்தியா சியாட்டில் குழு, அமெரிக்கா உதவியுடன், சேலம் மாவட்டம் , அருநூத்துமலையில் உள்ள 6 அரசு பழங்குடியினர் பள்ளிகளுக்கு, 2 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அதற்கான ஆணையை, துணைவேந்தர் கதிரேசன், பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார்.