/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏ.டி.ஜி.பி.,யின் 'சர்ப்ரைஸ் விசிட்' கலக்கத்தில் போலீசார்
/
ஏ.டி.ஜி.பி.,யின் 'சர்ப்ரைஸ் விசிட்' கலக்கத்தில் போலீசார்
ஏ.டி.ஜி.பி.,யின் 'சர்ப்ரைஸ் விசிட்' கலக்கத்தில் போலீசார்
ஏ.டி.ஜி.பி.,யின் 'சர்ப்ரைஸ் விசிட்' கலக்கத்தில் போலீசார்
ADDED : செப் 18, 2024 05:57 AM
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த ஜூன் மாதத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால், 66 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட அதிரடிப்படை போலீசார் கல்வராயன்மலையில் முகா மிட்டு, தீவிர சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
'ட்ரோன்' கேமரா மூலமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கள்ளச்சாராயம் காய்ச்சும் இடம், விற்பனைக்கு எடுத்துச்செல்லும் வழிகள், வியாபாரிகள் பட்டியல் உட்பட பல்வேறு தகவல்கள் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கடலுாரில் ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது மூன்று மாவட்ட போலீசாருக்கும் சவாலாக உள்ள புதுச்சேரி மதுபான கடத்தல், கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து கல்வராயன்மலை பகுதியில் நடந்த சாராய தேடுதல் வேட்டை பணிகளை பார்வையிட்ட ஏ.டி.ஜி.பி., அருகிலிருந்த கச்சிராயப்பாளையம், கரியாலூர் போலீஸ் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்ட எல்லைப்பகுதியிலுள்ள ராமநத்தம் போலீஸ் நிலையத்தில், ஆக., 17ம் தேதியும், வேப்பூரில் செப்., 8ம் தேதியும் சர்ப்ரைஸ் விசிட் அடித்தார்.
ஆய்வின் போது, ஏ.டி.ஜி.பி., கள்ளச்சாராயம் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். விற்பனை குறித்து தகவல் கிடைத்தால், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், இரு மாவட்ட எல்லைப்பகுதி போலீஸ் நிலையங்களில் அடிக்கடி சர்ப்ரைஸ் விசிட் அடிப்பது உள்ளூர் போலீசாரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.