ADDED : ஜூலை 01, 2024 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் தடகள போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் பாடலீஸ் தடகள கழகம் சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்நடந்தது.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 400 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பரிசளிப்பு விழாவில் பாடலீஸ் தடகள கழகத் தலைவர் தேவ்நாத் வரவேற்றார். மாவட்ட தடகள கழக செயலாளர் கோபாலகிருஷ்ணன், இணை செயலாளர் அசோகன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்கள் போக்குவரத்து காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், தொழிலதிபர் மோனீஷ் ராஜா ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.
ஏற்பாடுகளை மதன்குமார், உடற்கல்வி ஆசிரியர் ராஜசேகர், பயிற்சியாளர்கள் மாயகிருஷ்ணன்,ரஞ்சித் செய்திருந்தனர்.