/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வர்த்தக நல சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
வர்த்தக நல சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 20, 2024 12:58 AM

ஸ்ரீமுஷ்ணம்,: ஸ்ரீமுஷ்ணம் நகர வர்த்தக நல சங்கம் சார்பில் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம் கடைவீதி, சன்னதி வீதி, தெற்கு ரதவீதி, விருத்தசாலம் சாலை ஆகிய பகுதிகளில் சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது. சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பணிகள் நடக்கிறது.
மேலும், ஆமை வேகத்தில் பணிகள் நடப்பதால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து வர்த்தக நல சங்கம் சார்பில் பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் பணிகளை விரைந்து முடிக்கவில்லை.
இதனை கண்டித்து, ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜன், ஸ்ரீமுஷ்ணம் வர்த்தக சங்க செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சிவானந்தம் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஆமை வேகத்தில் நடக்கும் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பேசினர்.

