/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்ற அனுமதி ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை
/
பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்ற அனுமதி ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை
பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்ற அனுமதி ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை
பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்ற அனுமதி ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை
ADDED : மே 03, 2024 11:38 PM

கடலுார், -கடலுார் பஸ் நிலையத்திற்கு அருகில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கக்கோரி, ஆட்டோ டிரைவர்கள் எஸ்.பி., அலுவலகத்திற்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாநகராட்சி ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் கூட்டமைப்பு நல சங்கம் சார்பில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்தனர்.
தகவலறிந்த கடலுார் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் சம்பவ இடத்திற்கு வந்து ஆட்டோ டிரைவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது, கடலுார் மாநகராட்சியில் 40 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறோம். பஸ் நிலையம் நாகம்மா கோவில் அருகில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது காவல் துறையினர் கூறியுள்ளனர். மீறி ஆட்டோவில் பயணிகளை ஏற்றி இறக்கினால் போக்குவரத்து போலீசார் 5000 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர்.
இதனால், எங்களின் வாழ்வாதாரம் மிகவும் நலிவடைந்துள்ளது. பஸ் நிலையத்திற்குள் பயணிகளை ஏற்றி இறக்கவும் மற்றும் அபராத தொகையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து, ஆட்டோ டிரைவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என இன்ஸ்பெக்டர்கள் கூறினர். இதையடுத்து, ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.