/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரிஷப் ஜெயின் பள்ளியில் விருது வழங்கும் விழா
/
ரிஷப் ஜெயின் பள்ளியில் விருது வழங்கும் விழா
ADDED : மார் 08, 2025 02:07 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் ரிஷப் ஜெயின் சிறப்பு பள்ளியில், ரோட்டரி சங்கம் சார்பில், சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு தலைமைத்துவ விருது வழங்கும் விழா நடந்தது.
பள்ளி தலைவர் அகர்சந்த் தலைமை தாங்கினார். தாளாளர் ரமேஷ்சந்த் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் ஜெயக்குமார், மாவட்ட சேர்மன் சுகன்யா, குமாரப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிர்வாகிகள் நடேசன், செந்தில்குமார், கிரிபா, மாளவிகா முத்துக்குமார், வைத்தியநாதன், மாவட்ட செயலர் சம்பத், மண்டல துணை கவர்னர் தாசன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தலைமை பண்பில் சிறந்து விளங்கிய சிறப்பு குழந்தைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.