ADDED : ஜூன் 03, 2024 06:18 AM

நடுவீரப்பட்டு, : சி.என்.பாளையம் யாசின் டிரஸ்ட் சார்பில் அரசு பொதுதேர்வில் அதிக மதிப்பெண பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சந்தோஷம் ஆறுமுகம், நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், திருவெண்ணைநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி முன்னிலை வகித்தனர்.
டிரஸ்ட் நிறுவனர் சிராஜூதின் வரவேற்றார்.
நடுவீரப்பட்டு,சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு அரசு பொதுதேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சென்னை விஸ்டம் கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கல்வி ஆலோசகர் அப்துல்மதீன் மேற்படிப்பு சம்மந்தமான கருத்துரை வழங்கினார்.
டிரஸ்ட் செயலர் அப்துல்ரஹ்மான், தாஜூதின், பக்கிரிமுகமது, அக்பர் அலி, இஸ்மாயில், இப்ராஹிம், பஷீர், தாரீஸ், தணிகாசலம், ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.