/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுரேந்திரா மருத்துவனைக்கு சிறந்த சேவைக்கான விருது
/
சுரேந்திரா மருத்துவனைக்கு சிறந்த சேவைக்கான விருது
ADDED : ஜூலை 06, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மருத்துவர்கள் தினத்தையொட்டி தனியார் மருத்துவமனையின் சிறந்த சேவைக்கான விருதை கடலுார் சுரேந்திரா மருத்துவமனைக்கு கிடைத்துள்ளது.
மருத்துவர்கள் தினத்தையொட்டி சென்னை எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகத்தில் மாநில அளவில் சிறந்து விளங்கும் மருத்துவர்களை கவுரவிக்கும் விழா நடந்தது.
இதில் கடலுார் மாவட்டத்தை சேர்ந்த சுரேந்திரா பல்நோக்கு மருத்துவ மனை சிறந்த சேவையாற்றுவதற்கான பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.
அதற்கான பரிசை நிறுவனர் டாக்டர் ராஜேந்திரனுக்கு, மாநில விருதை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி வழங்கி கவுரவித்தனர்.