/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை வி.இ.டி., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
விருதை வி.இ.டி., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 07, 2024 04:43 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் எருமனுார் சாலையில் உள்ள வி.இ.டி., மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.
விருத்தாசலம் வி.இ.டி., மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு எழுதிய 152 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். மாணவி சவுமியா 569 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மாணவர் அன்பரசன் 562, மாணவர் ஆகாஷ் 553 மதிப்பெண்ணுடன் இரண்டு, மூன்றாமிடம் பெற்றனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை, கல்விக்குழும தலைவர் பத்மாவதி சக்திவேல், செயலாளர் விஜயலட்சுமி சுரேஷ்குமார், பொருளாளர் மோகனா கொளஞ்சிநாதன், தலைமை ஆசிரியர் எடில்பெர்ட் பெலிக்ஸ் ஆகியோர் சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர். மேலும், மாணவர்கள், பெற்றோர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.