/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
விருதை வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 12, 2024 05:41 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் விருதை வித்யாலயா பள்ளி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
விருத்தாசலம் எருமனுார் சாலையில் விருதை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். மாணவி கிரிஜா 491 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தார். மாணவிகள் காயத்ரி, தேவஸ்ரீ ஆகியோர் 489 மதிப்பெண்களும், மாணவி மதிபாலா 479 மதிப்பெண் பெற்றனர்.
சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு கல்விக்குழும தலைவர் செந்தில்குமார், செயலாளர் மதியழகன், பொருளாளர் வழக்கறிஞர் அருள்குமார் மற்றும் கல்விக்குழும இயக்குனர்கள், தலைமை ஆசிரியர் கமலீஸ்வரி ஆகியோர் சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினர்.