/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

ADDED : ஜூலை 04, 2024 11:43 PM

மந்தாரக்குப்பம் : ஊத்தங்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஊமங்கலம் காவல்துறை சார்பில் மக்கள் வளர்ச்சியில் மாவட்ட காவல்துறை திட்டத்தில் ஊத்தங்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரிஉதயகுமார், இன்ஸ்பெக்டர் பிருந்தா ஆகியோர் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இன்று (5ம் தேதி) மருத்துவமுகாம் மற்றும் குற்றவிழிப்புணர்வு தொடர்பான கலை நிகழ்ச்சிகள், குளங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் பூவராகவன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, பக்தவச்சலம், தலைமை காவலர்கள் சுதாகர், ராஜசேகரன், ஜோசப், செல்வமணி, தனிப்பிரிவு சங்குபாலன் மற்றும் காவல்துறையினர், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.