ADDED : ஜூலை 24, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
புவனகிரி: புவனகிரி ஒன்றியம் வடதலைக்குளம் அங்கன்வாடி மையத்தில் வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தலைமை ஆசிரியர் துரைமணிராஜன் தலைமை தாங்கினார். அங்கன்வாடி பணியாளர் ரஞ்சிதா வரவேற்றார். கிராம சுகாதார பணியாளர் ஹேமா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வளரிளம் பெண்கள் மற்றும் மகளிருக்கான ஊட்டச்சத்து குறைபாடுகள், சத்தான எளிய உணவு முறைகள், சுற்றுப்புற சுகாதாரத்தின் அவசியம், உள்ளிட்டவைகள் குறித்த, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். உதவி ஆசிரியர் வசந்தா நன்றி கூறினார்.
