/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
/
சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஆக 29, 2024 11:20 PM
சிதம்பரம்: சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைகழகம் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்குமார் தலைமை தாங்கினார்.திட்டஅலுவலர் நீலகண்டன்வரவேற்றார். கல்விசார் துறை இயக்குநர் முல்லைநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை தலைவர்அரவிந்த்பாபுபாராட்டுறை வழங்கினார்.
கடலூர்மாவட்ட சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா பங்கேற்று, இணைய வழி குற்றம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.