ADDED : ஜூன் 19, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
கிள்ளை: கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் குமாரவேல் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் மகாலட்சுமி வரவேற்றார்.
முதல் வகுப்பில் சேர்க்கப்பட்ட 20 குழந்தைகளுக்கு, பரங்கிப்பேட்டை வட்டார கல்வி அலுவலர் அறிவழகன், மாலை அணிவித்தார். மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி விழிப்புணர்வு ஊர்வலத்தை, கிள்ளை பேரூராட்சி சேர்மன் மல்லிகா துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் எஸ்தர் ஞானசெல்வகுமாரி, ராஜசெல்வம், சரண்யா, ராஜேஸ்வரி, ஆஷா, பள்ளி கல்விக்குழு தலைவர் சூரியா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
