/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
/
ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
ADDED : ஆக 18, 2024 05:27 AM

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழத்தில், ராகிங்கிற்கு எதிரான, மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராகிங் தடுப்புக் குழு சார்பில், ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது. 'ராகிங் இல்லா வளாகம்'எனும் தபை்பில், ராகிங்கிற்கு எதிரான பேரணி நடந்தது, மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை, பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், புல முதன்மையர்கள், துணைவேந்தரின் நேர்முக செயலா் பாக்கியராஜ், பி.ஆர்.ஓ., ரெத்தினசம்பத் மற்றும் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். சாஸ்திரி அரங்கில் துவங்கிய பேரணி, பல்கலைக்கழக மைய நுாலகம், யோகா மையம், தத்துவத்துறை, வேதியியல் துறை, இசைத்துறை வழியாக சென்று கல்வியியல் துறையில் முடிவுற்றது. மாணவர்கள் ராகிங்கிற்கு எதிரான பதாகைகளை தாங்கி, கோஷங்களை முழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ராகிங் தடுப்பு குழுவின் நோடல் அதிகாரி மாணிக்கவாசகம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.