/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீனஸ் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி
/
வீனஸ் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஆக 07, 2024 06:10 AM

சிதம்பரம், : சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் போதை பொருள் மற்றும் புகையிலை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பேரணியை இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு துவக்கி வைத்தார்.
பள்ளி வளாகத்தில் இருந்து துங்கிய சாரணர், சாரணியர் பங்கேற்ற பேரணிக்கு, தாளாளர் வீனஸ்குமார் தலைமை தாங்கினார். துணை தாளாளர் ரூபியாள் ராணி, முதல்வர் நரேந்திரன் முன்னிலை வகித்தனர்.
நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ் பொனிகலா வரவேற்றார்.சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, பேரணியை துவங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
தொடர்ந்து, பள்ளியில் நடந்த கூட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் பரணிகுமார் பங்கேற்று போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆசிரியர்கள் ஜெயந்தி, ரஞ்சித், பிரபாகரன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மாணவி சவிதா நன்றி கூறினார்.