/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூப்பந்தாட்ட போட்டி :பரிசளிப்பு விழா
/
பூப்பந்தாட்ட போட்டி :பரிசளிப்பு விழா
ADDED : ஆக 20, 2024 12:59 AM

பரங்கிப்பேட்டை,: பரங்கிப்பேட்டை பி.எம்.டி., கிளப்பில், சப் ஜூனியர் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் ஐவர்பூப்பந்தாட்ட போட்டி நடந்தது.
ஆண்கள் பிரிவில், பு.முட்லுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், பெண்கள் பிரிவில், பரங்கிப்பேட்டைஅரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. மேலும், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 10 பேர்சிறந்த வீரர்களை தேர்வு செய்து, மாநில அளவிலான போட்டியில் விளையாட உள்ளனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. மாவட்ட பூப்பந்தாட்ட கழக செயலாளர் விக்ரமன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, பரங்கிப்பேட்டை பேரூராட்சி கவுன்சிலர் ஜெயந்தி ஜெய்சங்கர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.மலை நடராஜ் நன்றி கூறினார்.

