தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பக்ரீத் சிறப்பு தொழுகை

பக்ரீத் சிறப்பு தொழுகை

பக்ரீத் சிறப்பு தொழுகை


ADDED : மே 28, 2026 06:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 06:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: பக்ரீத் பண்டிகையையொட்டி, கடலுாரில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

கடலுார் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், செம்மண்டலம், முதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பக்ரீத் பண்டிகையையொட்டி மசூதிகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

மஞ்சக்குப்பம் அஞ்சுமனே நுாரே முகம்மதியா மஸ்ஜித் ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். தொழுகைக்குப்பின் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து ஏழைகளுக்கு குர்பானி வழங்கினர்.

அதேபோல, நெல்லிக்குப்பத்தில், நேற்று காலை 7:00 மணிக்கு, இஸ்லாமியர்கள், சின்னதெரு பள்ளிவாசலில் கூடினர்.

அங்கிருந்து நகரத்தின் முக்கிய சாலை வழியே ஊர்வலமாக சென்று கொத்வாபள்ளியில் உள்ள பள்ளிவாசலை அடைந்தனர். அங்கு நடந்த சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்து ஒருவரையொருவர் கட்டி தழுவி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us