ADDED : ஜூலை 30, 2024 05:31 AM

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த பாலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், புதிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு இடையூறாக உள்ளதாக, பள்ளி வளாகத்தில் இருந்த பழமையான மரத்தை நேற்று முன்தினம் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதையறிந்த ஊராட்சி தலைவர் தாரணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வராஜ் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பள்ளி வளாகத்தில் கூடி, முற்றுகையில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் தலைமையில் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளி மேலாண்மை குழு அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது. ஆனாலும், முறைப்படி அரசிடம் அனுமதி பெறவில்லை என, பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். அதனை தொடர்ந்து, இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.