/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாலூர் அரசு பள்ளி ஹாக்கியில் முதலிடம்
/
பாலூர் அரசு பள்ளி ஹாக்கியில் முதலிடம்
ADDED : செப் 12, 2024 05:56 AM
நடுவீரப்பட்டு: அண்ணாகிராம குறுவட்ட விளையாட்டுப்போட்டிகள் பட்டாம்பாக்கம் தனியார் பள்ளியில் நடத்தப்பட்டது. இதில், 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்பட்ட ஹாக்கி போட்டியில், பாலுார் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று முதல் பரிசு பெற்றனர். இந்த மாணவர்கள் கடந்த ஆண்டு மாவட்ட அளவில் நடந்த ஹாக்கி போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 19 வயதிற்குட்பட்ட மாணவியருக்கான குறுவட்ட விளையாட்டு போட்டியில், கோ -கோ விளையாட்டில் இப்பள்ளி மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியை அன்னபூரணி உடற்கல்வி ஆசிரியர்கள் தனசேகர், சுந்தரேசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
பள்ளியில் சரியான ஹாக்கி விளையாட்டு திடல் இல்லாத நிலையிலும், மாணவர்கள் ஹாக்கியில் சாதித்துள்ளனர்.