/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
சிதம்பரத்தில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 22, 2025 09:44 PM

சிதம்பரம் : சிதம்பரத்தில், அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் சங்கம் மற்றும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிதம்பரம் தெற்கு வீதி இந்தியன் வங்கி அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார்.
நீலமேகம், குமார், மாவட்ட பொதுச் செயலாளர் ராவ் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் வங்கிகளில் உள்ள 2 லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக மாற்ற வேண்டும், அனைத்து தற்காலிக ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் வெங்கடாசலம், வேல்ராஜ், முருகேசன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

