ADDED : மே 10, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
சங்க தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சக்திவேல், பொருளாளர் குணசேகரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பரங்கிப்பேட்டை நீதிமன்றத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிபதி பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. விரைந்து நீதிபதி பணியிடம் நிரப்ப சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியை சந்திப்பது. ஐகோர்ட் ரிஜிஸ்டர் ஜெனரலுக்கு கடிதம் எழுவது, வரும் ஜூன் மாதத்திற்குள் நீதிபதி பணியிடம் நிரப்பவில்லையெனில் ஜனநாயக வழியில் போராட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், வழக்கறிஞர்கள் மயிலைநாயகம், முகமது அனிபா, ரீனா, கிருத்திகா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.